பழங்காநத்தத்தில் குவிந்த இந்து அமைப்பினர்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்திலிருந்து ஏராளமானோர் பங்கேற்ற அறவழி ஆர்பாட்டத்தில், கணிசமான அளவில் பெண்கள் பங்கேற்றனர். ‘கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா..’ என்ற முழக்கங்களுடன் பழங்காநத்தம் பகுதி பரபரப்பானது. இந்த ஆர்பாட்டத்தில், 50-க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள், பாஜக, இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிசத், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்பினர் ஆதரவாக பங்கேற்றனர்.