சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த அழகாபுரியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க இந்து முன்னணி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பலரும் கலந்து கொள்ள வேண்டும் என ஹெச்.ராஜா சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.