இந்த நிலையில் நீதிபதிகள் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தனர். குறிப்பாக, மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை 1 மணி நேரம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்ததை தொடர்ந்து, இந்து முன்னணி, பாஜக உட்பட இந்து அமைப்பினர் பல்லாயிரக்கணக்கானோர், பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.