நிர்வாகிகள் நியமனத்திற்கு பணமா?
இதனிடையே தவெக மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய 15 லட்சம் வரை பணம் பெறப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. முன்னதாக, விழுப்புரம் நகர தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சம் கேட்பதாக புகார் எழுந்திருந்தது. இதுகுறித்து விழுப்புரம் தவெக வாட்ஸ் ஆப் குரூப்பில் வாட்ஸ் ஆப் சேட் ஒன்று கசிந்துள்ளது. அதில், விழுப்புரம் மாவட்ட தலைவராக இருக்கும் ‘குஷி’ மோகன் நகர தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சம் நிர்ணயித்தாக குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது. 19 அணி தலைவர்களுக்கும் அந்தந்த பதவிக்கு ஏற்ற வகையில் பணம் நிர்ணயம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கட்சி பொறுப்புகளுக்கு பணம் பெறும் நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் மூலம் விஜய் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.