India Open: பி.வி. சிந்து ஒரு மணி நேரம் போராட்டம் வீண்.. பதக்க நம்பிக்கையை தக்க வைத்த சாத்விக்

Photo of author

By todaytamilnews


பி.வி. சிந்து, கிரண் தோல்வி

பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய ஸ்டார் வீராங்கனையான பி.வி. சிந்து, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தோனேஷியா வீராங்கனை கிரிகோரியா மாரிஸ்கா துன்ஜங்க்கு எதிராக மோதினார். கட்டாய வெற்றி பெற்றாக வேண்டிய இந்த போட்டியில் முதல் சுற்றை பறிகொடுத்தார். பின்னர் இரண்டாவது சுற்றில் எழுச்சி பெற்ற சிந்து, இறுதி சுற்றில் போராட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் தோல்வியை தழுவினார். 21-9, 19-21, 21-17 என்ற புள்ளிக்கணக்கில் பி.வி. சிந்து வெற்றியை பறிகொடுத்தார். சுமார் ஒரு மணி நேரம் 2 நிமிடம் வரை இந்த போட்டி நீடித்தது.


Leave a Comment