முக்கியப் போராட்டங்கள்:
இந்தியாவிலுள்ள இடதுசாரி அரசியல் அமைப்பான விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத்தலைவராக 25ஆண்டுகள் இருந்து விவசாயிகளுக்கான போராட்டங்களில் ஈடுபட்டார், நல்லகண்ணு. பின், 1992ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டுவரை ஏறத்தாழ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளராக களமாடி, பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர்.