’சட்ட அமைச்சரா? திமுக பேட்டை ரவுடியா?’ அமைச்சர் ரகுபதியை விளாசும் அண்ணாமலை!

Photo of author

By todaytamilnews


கேள்வி:- அல் உமா இயக்கத்தை சேர்ந்த பாஷாவின் இறுதி ஊர்வலம் தொடர்பாக பாஜகவை திருமாவளவன் விமர்சித்து உள்ளாரே?

இஸ்லாம் தவறு என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் தீவிரவாதியை கொண்டாடுவது தவறு என்று சொல்கிறோம். ஆனால் பிறப்பின் அடிப்படையில் நான் விமர்சிக்கவில்லை. பாஜக சார்பில் ஜனாதிபதி, முதலமைச்சர், அமைச்சர்கள் வரை நாங்கள் சரியான மரியாதை கொடுத்து உள்ளோம். திமுகவுடன் இருக்க வேண்டும் என்பது திருமாவளவனின் கட்டாயம், கிளிப்பிள்ளையை போல் பேச வேண்டிய திருமாவின் நிலையை நினைத்து வருத்தப்படுகிறேன். திமுகவை எதிர்த்து பாஜக போராடினால் அனுமதி கிடையாது. ஆனால் தீவிரவாதி என்று சொல்லி ‘புதைப்படுகிறார், விதைக்கப்படுகிறார்’ என்று சொல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போட முடியாதா?. அண்ணாமலை மீது வழக்கு போட வேண்டும் என்றால் ஓடி வருகிறார்கள். ஆனால் கோயம்புத்தூரின் சூழலை கருத்தில் கொண்டு 144 தடை சட்டம் போட முடியாதா?; 


Leave a Comment