திருப்பி அனுப்பிய நீதிபதி
பின்னர் நீதிபதியிடம் சென்ற அவர், மனைவிக்கு கொடுக்க வேண்டிய ஜீவனாம்ச தொகையின் ஒரு பகுதியான, 80 ஆயிரம் ரூபாயை, பொடி சில்லறையாக கொண்டு வந்திருப்பதாக, இரு பைகளை நீட்டியுள்ளார். தனது இந்த செயல் மூலம், மனைவிக்கு ஏதோ ஒரு விசயத்தை சொல்ல அவர் முயற்சிப்பதையும், அவரது வன்மத்தையும் புரிந்து கொண்ட நீதிபதி, அந்த சில்லறையை ஏற்க மறுத்து, அவற்றை ரூபாய் நோட்டுகளாக மாற்றி வருமாறு அந்த கணவருக்கு அறிவுரை வழங்கி, வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தார்.