திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக என்ற கட்சி அழிந்து விடும் என பாஜக நினைக்கவில்லை. அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இருந்தால்தான் திமுக எனும் தீய சக்தியை வெல்ல முடியும் என்று நினைக்கின்றனர். 2021ஆம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி பழனிசாமி சுயநலத்தால் எடுத்த தவறான முடிவால் திமுக ஆட்சிக்கு வந்தது. 2024 தேர்தலில் பாஜக உடன் நான் நேரடியாக கூட்டணி வைத்து உள்ளேன். அன்றைக்கு திமுகவுக்கு எதிராக வேட்பாளரை ஈபிஎஸ் நிறுத்தாமல் இருந்தாலே நாங்கள் வெற்றி பெற்று இருப்போம். புரட்சித் தலைவர் கண்டெடுத்த இரட்டை இலை சின்னம், திமுகவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவி செய்கின்றது. எனக்கு தெரிந்த வரை பாஜகவில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் அதிமுக பலமாக இருந்து கூட்டணியில் வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.