இது தொடர்பாக, ‘அல் உம்மா’ இயக்க தலைவர் பாஷா, அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உள்பட, 167 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கோவை தனிக்கோர்ட்டில் விசாரணை நடந்தது. கடந்த 2007ல், தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் பாஷா, அன்சாரி உள்பட பலருக்கு ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு தலா, 10 ஆண்டு, 7 ஆண்டுகள் என்று சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிலர் மேல் முறையீடு செய்ததால், விடுதலை செய்யப்பட்டனர். மேலும் பாஷா, அன்சாரி உள்பட, 14 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.