தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் கூட்டத்தின் கேள்வி நேரத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினரான கே.பி.முனுசாமி, ”தமிழ் மொழியில் அழிந்து வரும் நிலையில் இருந்த பண்டைய தமிழ் இலக்கியங்களை தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர், 20ஆம் நூற்றாண்டில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் மற்றும் எழுத்துபிரதிகளை தமிழ்நாடு முழுவதும் அலைந்து திரிந்து கண்டுப்டித்து பதிப்பித்தார்கள். அந்த காலத்தில் ஒரு புத்தகத்தை பதிப்பு செய்வது என்பது பொருளாதார ரீதியாக இயலாத காரியம். கல்விமான்கள், செல்வந்தர்களிடம் சென்று ஒப்பந்தம் போட்டார். 90க்கும் மேற்பட்ட நூல்களை பதிப்பித்து தமிழ்த்தாத்தா உவேசா அவர்கள் கொண்டு வந்துள்ளார்கள். அவருடைய பிறந்தநாளான பிப்ரவரி திங்கள் 19ஆம் நாளில் இலக்கியத்தின் மறுமலர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தேன். அமைச்சர் அவர்கள் அதை பரிசீலிப்பார்களா?” என கேள்வி எழுப்பினார்.