இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எல்லா உறுப்பினர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக நீர்வளத்தை பெருக்க தடுப்பணை கட்ட வேண்டும் என்பதுதான். அதனை நான் முழுக்க ஏற்றுக் கொள்கிறேன். நானே அதை பரிட்சார்த்தமாக பார்த்து இருக்கிறேன். எனவே இந்த ஆண்டு முதலமைச்சரிடம் இதை எடுத்து கூறி ஆயிரம் தடுப்பணைகள் கட்டுவதற்கு உரிய அனுமதியை பெற முயற்சிப்பேன். அண்ணா மண்; தம்பி மண் என்பது அல்ல, எல்லா மண்ணுக்கும் கட்டப்படும் என தெரிவித்தார்.