எந்த தலைவரும் இப்படி பேசியதில்லை
‘‘முதலில் களத்தில் இருந்து சுயம்புவாக எழுந்து வந்த ஒரு தலைவரை, சுயமாக முடிவெடுக்கக் கூடிய திறனும், அறிவும் நிரம்பப் பெற்றிருக்கிற ஒரு தலைவரை, எழுத்தாலும், பேச்சாலும், அறிவார்ந்த வெளிபாட்டாலும், முதிர்ச்சியாலும் பண்பால் அரசியல் களத்தில் உயர்ந்து நிற்கக் கூடிய ஒரு தலைவரை, கட்சிகளின் கூட்டணிகளின் கட்டுப்பாட்டில் சிக்கிக் கிடப்பவர், முடிவெடுக்கத் தெரியாதவர் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை விஜய் ஏற்படுத்தியிருப்பது அபத்தமானது, அவலமான பேச்சு, கண்டித்தக்கப் பேச்சு.