இவை அனைத்தையும் சேர்த்து ஒன்றாக வதக்க வேண்டும். இவை ஓரளவுக்கு வதங்கியதும் ஒரு தக்காளியை எடுத்து நறுக்கி அதனுள் போட வேண்டும். தக்காளி நன்கு வதங்கிய பின்னர் சிறிதளவு கறிவேப்பிலை போட வேண்டும். இதனை அடுத்து மசாலா பொருட்களை சேர்க்க வேண்டும். இரண்டு டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிவிட வேண்டும். இவை நன்கு வறுபட்டதும் இறுதியாக ஒரு டீஸ்பூன் மிளகுத்தூளை சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் நன்கு வறுபட்டதும் சிறிதளவு தண்ணீரை ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். இந்த நேரத்தில் நாம் பொரித்து எடுத்து வைத்திருக்கும் இட்லியை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.