வழக்கமாக டிஃபனுக்கு வைக்கப்படும் ஒன் பாட் சாம்பாரில் இருந்து வேறுபட்டது. இது தேங்காய் அரைத்துவிட்டு செய்யப்படும் சாம்பார் ஆகும். இந்த சாம்பார், இட்லி, சாம்பார் இட்லி, தோசை, கிச்சடி, வெண் பொங்கல், உப்புமா, என அனைத்திற்கும் ஏற்றது! சாம்பார் வடைக்கு மிகவும் பிரமாதமான சாம்பார். வடைக்கு மட்டும் இதைச் செய்தால் சாம்பாரை மிகவும் கெட்டியாக வைக்கத் தேவையில்லை. இந்த சாம்பார் கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும். மிக்ஸியில் அரைக்காமல் மசாலாவை அம்மியில் கையால் அரைத்தால் சுவை இன்னும் நன்றாக இருக்கும். முக்கியமான விஷயம் இந்த சாம்பாரை சோற்றில் ஊற்றிச் சாப்பிட நன்றாகவே இருக்காது.