கம்பு சிறுதானியங்களில் ஒன்று. கம்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதனால் தான் இன்று கம்பை அதிகமான மக்கள் இதை தங்கள் உணவில் ஒரு பகுதியாக மாற்ற நினைக்கிறார்கள். கம்பில் கூழ், சோறு என்று பல விதங்களில் உணவில் சேர்த்து வருகின்றனர். இங்கு கம்பு லட்டு செய்முறையை கொடுத்துள்ளோம். இது உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மிகவும் நல்லது. இந்த லட்டை நீங்கள் மிகவும் எளிதாக செய்யலாம். ஒருமுறை தயாரித்தால், இரண்டு வாரங்களுக்கு அவை கெட்டுப்போகாது. தினமும் லட்டு சாப்பிட்டாலே போதும். அவை உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு, பல வகையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன. கம்பு லட்டை ஈசியாக செய்வது எப்படி என்று இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.