உடலுக்கு பல நன்மைகளை தரும் வகையில் இயற்கை பல மூலிகைகளை கொண்டுள்ளது. இந்த மூலிகைகள் பல விதமான உடலின் பிரச்சனைகளை குணப்படுத்தி ஆரோக்கியமனதாக வைக்க உதவுகிறது. அந்த வரிசையில் ஒரு சிறந்த ஆயுர்வேத மூலிகை தான் சங்குப்பூ, பார்ப்பதற்கு ஊதா நிறத்தில் மையத்தில் வெண்மை நிறத்திலும் அழகான பூவாக இது இருக்கும். இந்த பூ பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. சங்கு பூவில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் இந்த வகையான ஆரோக்கிய நன்மைகளில் ஒன்றாகும். சங்குப்பூவானது மன அழுத்தத்தை போக்கவும் , அறிவுசார் செயல்பாடுகளை மேம்படுத்தவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.