வரகு அரிசியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதன் காரணத்தினால் வரகு அரிசியில் செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயித்துலயும், குடல்லயும் இருக்குற புண்கள் குணமாறதுக்கு உதவிசெய்றதோட, மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும் வல்லமை இதற்கு உள்ளது. தாது உப்புக்கள், இரும்புச் சத்து, வைட்டமின்கள், சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்து என பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது உடலை வலிமையாக்கவும், நோயில் இருந்து பாதுகாக்கவும் பயன்படுகிறது.