முந்திரியில் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. அதனால்தான் அவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் முந்திரியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இருப்பினும், இதைப் பற்றிய தவறான கருத்து மிகவும் பிரபலமாகிவிட்டது. முந்திரி பருப்பு சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த விஷயத்தில் உண்மை உள்ளதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்