பின்னர் வறுத்த அனைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தில் வெல்ல பாகு, துருவிய தேங்காய், வேர்க்கடலை அவல் தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை நன்கு கலந்த பின்னர் வறுத்து வைத்திருந்த முந்திரி, உலர் திராட்சை மற்றும் இரண்டு மேசைக்கரண்டி நெய் சேர்க்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு கலவையை ஒரு தட்டில் வைத்து முழுமையாக ஆற வைக்கவும். கலவை ஆறிய பிறகு அதில் சிறிது எடுத்து லட்டுவாக பிடிக்கவும். சுவையான அவல் லட்டு தயார். இதில் சர்க்கரை குறைவாக வேண்டும் என்பவர்கள் குறைவாக கலந்து கொள்ளலாம். வீட்டில் எளிமையாக குறைவான நேரத்திலேயே இதனை செய்து கொடுக்க முடியும். வீட்டில் உள்ள சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நீங்களும் இதனை செய்து பார்த்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். இது நிச்சயமாக விழாக்கால ரெசிபியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.