செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் கடலை பருப்பு, மல்லி மற்றும் சீரகம் சேர்த்து நன்கு வறுக்கவும். இவை நன்கு வறு பட்டவுடன் பூண்டு, புளி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும். இவை நன்கு வதங்கிய பின் அதில் மிளகாய் தூள், கல் உப்பு, பெருங்காய தூள், வெல்லம் சேர்த்து மிக்சியில் போட்டு தூளாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த பூண்டு மசாலாவை ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு கிலோ பாகற்காய்களை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி, பெரிய விதைகளை அகற்றி, அவற்றில் உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து நன்கு கலக்கவும்.