நீங்கள் இந்தப்பொடியை வீட்டிலேயே தயாரித்துவிடமுடியும். இதை நீங்கள் தினமும் இரவு உணவுக்கு பின்னர் கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டும். இதனால் உங்கள் உடலில் உள்ள கொழுப்பு குறைகிறது. அதற்கு இந்த சக்திவாய்ந்த மூன்று பொட்கள் மட்டும் தேவைப்படுகிறது. இசாப்கால், வெந்தயம் மற்றும் பட்டை ஆகியவை ஆகும். இசாப்கால் என்பதை நீங்கள் நாட்டு மருந்து கடைகளில் இருந்து பெறலாம். இது செரிமானத்தைத் தூண்டி, மலச்சிக்கலைப் போக்குகிறது. இது கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. வெந்தயம் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பட்டையில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளன. இதனால் இவை மூன்றையும் சேர்த்து பொடிசெய்து வைத்துக்கொண்டு, இரவு உணவுக்கு பின்னர் தேநீராக தயாரித்து பருகினால் போதும் உங்கள் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இந்த மூன்று பொருட்களையும் சமஅளவு எடுத்து பொடித்துவைத்துக்கொண்டு, அதை இரவு உணவு உட்கொண்ட பின்னர் தண்ணீரில் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி பருகவேண்டும்.