வேர்க்கடலையில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகளை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். 100 கிராம் கடலையில், 564 கலோரிகள், ஈரப்பதம் 6 சதவீதம், புரதச்சத்து 26 கிராம், கார்போஹைட்ரேட் 18.6 கிராம், கரையக்கூடிய சர்க்கரை 4.5 சதவீதம், நார்ச்சத்துக்கள் 2.1 சதவீதம், கொழுப்பு 47.5 கிராம், எண்ணெய் 48.2 சதவீதம், ஸ்டார்ச் 11.5 சதவீதம் உள்ளது. கால்சியம் 69 மில்லி கிராம், இரும்புச்சத்து 2.1 மில்லிகிராம், பாஸ்பரஸ் 401 மில்லிகிராம், மெக்னீசியம் 168 மில்லிகிராம், வைட்டமின் பி 3 17.2 மில்லிகிராம், வைட்டமின் பி1 1.14 மில்லிகிராம் உள்ளது. சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஈசிமா உள்ளிட்ட பல சரும நோய்களை கடலை குணமாக்குகிறது. இதில் ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளன. இதய நோய்கள் ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கிறது. கடலையில் உள்ள ஆரோக்கியமான அன்சாச்சுரேடட் கொழுப்புகள், புரதம், நார்ச்சத்துக்கள், மெக்னீசியம், ஃபோலேட், தியாமின் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை இதய ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன.