இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மல்லி தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சிறிது நேரம் வதக்கவும். பிறகு அதில் தண்ணீர் ஊற்ற வேண்டும். மேலும் அதில் நறுக்கிய முட்டை துண்டுகளை போட்டு மசலாவோடு சேர்த்து கிளறவும். பின்பு அதில் கரம் மசாலா, மற்றும் கொத்தமல்லியை போட்டு அதை நன்கு கிளறி விட்டு வேக விடவும். பின்னர் இந்த மசாலாவை ஆற வைக்கவும். பிறகு ஒரு பிரட்டை எடுத்து அதில் வெண்ணெய் மற்றும் புதினா சட்னியை தடவி அதில் முட்டை கலவை, வட்ட வடிவில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, மற்றும் குடை மிளகாய்யை வைக்கவும். பின்பு அதில் சிறிதளவு சாண்ட்விச் மசாலா மற்றும் சீஸை துருவி போட்டு பிறகு இன்னொரு பிரட்டை எடுத்து அதில் வெண்ணெய்யை தடவி அதன் மேல் வைத்து அதை லேசாக அழுத்தி விடவும். ஒரு கடாயில் வெண்ணெய் தடவி இந்த பிரட்டை வைத்து இரு புறமும் நன்கு வேகும் வரை வேக விட வேண்டும். இதனை எடுத்து சாஸ் உடன் பரிமாற வேண்டும். சுவையான முட்டை மசாலா சாண்ட்விச் தயார்.