பார்த்தாலே பசி எடுக்கும் பன்னீர் நெய் பிரட்டல்!சப்பாத்தி முதல் சாதம் வரை குட் சாய்ஸ்!

Photo of author

By todaytamilnews


செய்முறை

முதலில் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வற மிளகாயை போட்டு அதை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ள வேண்டும். பின்பு அதே கடாயில் மல்லி விதைகள், சீரகம், சோம்பு, மிளகு, வெந்தயம், மற்றும் கிராம்பை போட்டு அதை வறுக்க வேண்டும். நன்கு வறுபட்டதும் அதனை ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் நறுக்கிய பூண்டு, இஞ்சி, மற்றும்  புளியை ஊற வைத்து எடுத்த தண்ணீர் ஆகியவற்றை ஊற்றி அதை நன்கு அரைத்து பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும். அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடாக்கவும். நெய் சூடானதும் நறுக்கிய பன்னீரை போட்டு இரு புறமும் பொன்னிறமானதும் அதை  எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பன்னீரை வறுக்க பயன்படுத்திய நெய்யையே அதில் ஊற்றவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு அதை வதக்கவும்.


Leave a Comment