திருநெல்வேலி சொதி குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். இது கும்பகோணம் கடப்பா போலவும் இருக்கும். கடப்பாவில் நாம் காய்கறிகள் சேர்ப்பதில்லை. உருளைக்கிழங்கு மட்டும் சேர்கிறோம். தேங்காவை முழுமையாக சேர்க்கிறோம். இதில் காய்கறிகள் சேர்ப்பதுடன், தேங்காய் பால் எடுத்து சேர்க்கிறோம். ஆனால் இரண்டும் கிட்டத்தட்ட நெருங்கிவரும் ஒன்றுதான். அவியலுடனும் இதை தொடர்புபடுத்தலாம். ஆனால் அவியலில் நாம் பாசிபருப்பு சேர்க்கமாட்டோம். இவை மூன்றும் சின்ன சின்ன மாற்றங்களைக்கொண்ட கிட்டத்தட்ட ஒரே மாதிரி செய்யப்படும் உணவுகள்தான். இது ஒவ்வொரு பகுதிக்கும், கால கட்டத்துக்கும் ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண் ஒன்றாக இருக்கலாம் என உணவியல் நிபுணர்கள் கணிக்கிறார்கள். சொதி, இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கக்கூடிய உணவுகளுள் ஒன்று. இலங்கை தமிழர்கள் சொதியை அதிகம் தங்கள் அன்றாட உணவில் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் திருநெல்வேலி முதல் தென் தமிழகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த திருநெல்வேலி ஸ்பெஷல் சொதியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இது இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், அடை என டிஃபன் வெரைட்டிகளுடனும், சாதம் என இரண்டுடனும் சேர்த்து சாப்பிட ஏற்றது.