இதில் முந்திரி, பாதாம், பிஸ்தா, திராட்சை போன்ற பல சத்தான உணவுகளையும் சேர்த்துள்ளோம். அதனால் அவை உடலுக்கு ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் தருகின்றன. வாரத்திற்கு ஒரு முறையாவது இதை குழந்தைகளுக்கு சமைத்து கொடுக்கலாம். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். பெரியவர்களும் இதை சாப்பிடலாம். தனியாக ஒரு குழம்பே தேவைப்படாது. ஆனால் கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் அபாயம் உள்ளவர்கள் அளவாக சாப்பிட வேண்டும். நோயில் தீவிரம் அதிகம் இருந்தால் மருத்துவ ஆலோசனைப்படி உணவை எடுத்துகொள்வது நல்லது.