நவீன யுகத்தின் உணவு மற்றும் வாழ்க்கை முறை அனைத்தும் உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கிறது. எடை அதிகரிப்பு தோற்றத்தைக் கெடுப்பது மட்டுமல்லாமல், இல்லாத உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. உடல் எடையை குறைப்பது சவாலாக இருக்கும் இக்காலகட்டத்தில், உடல் எடையை குறைக்க பலரும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். சிலர் மருந்து சாப்பிடுகிறார்கள். சிலர் உடலுக்கு ஒத்துவராத உணவு முறைகளை பின்பற்றுகின்றனர். இதனால் பக்கவிளைவுகள் அதிகம். உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் நீங்கள் விரும்பினால், இந்த பொருளை காலையில் தண்ணீரில் சேர்த்து குடிக்க வேண்டும். அதுதான் சீரகம்.