சண்டே ஸ்பெஷல் சிக்கன் கறி! வெள்ளை சிக்கன் கறி குழம்பு செய்வது எப்படி? பக்கா ரெசிபி இதோ!

Photo of author

By todaytamilnews


செய்முறை 

முதலில் ஒரு காடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். இந்த எண்ணெய் சூடானதும் அதில் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை ஆகியவற்றை போட்டு நன்கு வறுக்கவும். இவை வதங்கியதும் அதில் நீளமாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். இந்த வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் சிக்கன் போட வேண்டும். இந்த சிக்கன் நன்றாக வறுபடும் வரை வறுக்க வேண்டும். பின்னர்  இஞ்சி மற்றும் பூண்டை நறுக்கி அரைத்து பேஸ்ட் ஆக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இஞ்சி பூண்டு பேஸ்டை சிக்கனுடன் சேர்க்க வேண்டும். மேலும் 5 பச்சை மிழகாய்களை கீறி போட வேண்டும். சிறிதளவு கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும். இது நன்றாக வதங்கியதும், அதில் ஒன்றரை டீஸ்பூன் மல்லித் தூள், அரை டீஸ்பூன் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். 


Leave a Comment