ரசம் அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். ரசத்தில் பொதுவாக மிளகு, சீரகம் ஆகியவை சேர்ப்பதால், அது உங்களுக்கு ஜீரணத்தைக் கொடுக்கிறது. இதனால் உங்கள் உடலுக்கு மிகுந்த நன்மையைக் கொடுக்கிறது. ரசத்தை நாம் உணவுடன் சேர்த்து சாப்பிடும்போது, அது உடனடியான ஜீரணமாகிவிடுகிறது. இதனால்தான் ரசத்தை நாம் உணவுடன் சேர்த்து சாப்பிடுகிறோம். குழம்பு சாதம் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை ரசம் மட்டுமே கூட போதுமானது. குறிப்பாக காய்ச்சல் வந்தால் ரசம் சாதம் தான் கொடுப்பார்கள். அது அவர்களுக்கு செரிமானத்தை தரும் ஒன்றாகும். அதனுடன் அதில் சேர்க்கப்படும் உட்பொருட்கள் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்புத்திறன் அதிகரித்து காய்ச்சலில் இருந்து விரைவில் விடுபட முடிகிறது. மேலும் பல்வேறு வகை ரசங்கள் வைக்கப்படுகிறது. முடக்கத்தான் ரசம், துளசி ரசம், வெற்றிலை ரசம் என பலவகை ரசங்களும் நம் உடல் உபாதைகளுக்கு மருந்தாகின்றன. மேலும் ரசம் வைப்பது மிகவும் எளிது. அதுமட்டுமின்றி உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கக்கூடியது ரசம். நாம் வீட்டில் செய்யும் ரசத்தைவிட கல்யாண விருந்துகளில் பரிமாறப்படும் ரசம் மிகுந்த சுவையானதாக இருக்கும். இந்த ரசத்தை நாம் வீட்டிலும் செய்ய முடியும். அந்த ரகசியத்தை இப்போது தெரிந்துகொள்ளுங்கள்.