ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறாரா விஜய்? தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த மூவ் என்ன?

Photo of author

By todaytamilnews


மேலும், ஆளுநருடனான சந்திப்பிக்குப் பின், விஜய்யின் பாய்ச்சல் இன்னும் பல மடங்கு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் ஒவ்வொரு அடியும், யாரும் எதிர்பார்க்காதவாறு இருப்பதால், அவரின் அரசியல் நகர்வுகள் கணிக்க முடியாதவாறு உள்ளது. தமிழக அரசியலில் திமுகவினரின் நேரடி எதிர்ப்பை எதிர்கொண்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் விஜய் சந்திக்க திட்டமிட்டிருப்பது, தமிழக அரசியல் களத்தில் இன்னும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. திமுகவை நேரடியாக எதிர்க்க முன்வந்திருக்கும் விஜ்ய்யின் நிலைப்பாட்டை, ஆளுநர் கட்டாயம் அறிந்திருப்பார் என்பதால், இந்த சந்திப்பு, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் இந்த சந்திப்பு தொடர்பாக, இதுவரை அதிகாரப்பூர்வ வெளியீடு எதுவும் இருதரப்பிலும் வெளியாகவில்லை.


Leave a Comment