கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் வேகமாகப் பரவுவதற்கு அவை காரணமாகின்றன. கொசுக்களால் சிறியவர்க முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நோயால் பாதிக்கப்படுகின்றனர். பருவ கால மாற்றத்தால் தற்போது ஒவ்வொரு வீட்டிலும் கொசுக்கள் அதிகரித்து வருகின்றன. கொசுக்கள் இரவு பகலாக மக்களை வாட்டுகிறது. இந்த கொசுக்களிடம் இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும். இன்று சந்தையில் கொசு விரட்டி பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகின்றன. ஆனால் அவற்றைப் பயன்படுத்தி பல இரசாயனங்கள் காற்றில் வெளியாகின்றன. அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சிலருக்கு இதனால் ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. ரசாயனங்கள் எதுவும் பயன்படுத்தாமல் வாழைப்பழத்தை வைத்து கொசுக்களை விரட்டலாம்.