கொங்கு ஸ்பெஷல் தக்காளி குழம்பு; காலையிலே செஞ்சுட்டு ரெஸ்ட் எடுங்க! மூன்று வேளைக்கும் வெச்சுக்கலாம்!

Photo of author

By todaytamilnews


காலை இட்லி, மதியம் சாப்பாடு, இரவு சப்பாத்தி என மூன்றுக்கும் நல்ல ஒரு சைட்டிஷ் என்றால் அது தக்காளிக் குழம்பு, இதை செய்வது எளிது. ஒரு நாளில் காலையில் இதை செய்து வைத்துக்கொண்டால் போதும். அன்றைய நாள் முழுவதுமே ஓட்டிவிட முடியும். இதை செய்வதற்கு முன் தக்காளியின் நன்மைகள் என்னவென்று பாருங்கள். தக்காளியில் உங்கள் உடலுக்கு தேவையான அளவு பீட்டா கரோட்டின்கள், லைக்கோபென்கள், வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இவையனைத்தும் செல்களின் சேதத்தை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகும். தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதய நோய்கள், டைப் 2 நீரிழிவு நோய்கள் மற்றும் நரம்பியல் கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. தக்காளி அதன் பன்முக குணங்களுக்காக சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பச்சை, மஞ்சள், சிவப்பு என அனைத்து நிறங்களிலும் உள்ளது. இதன் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். நோய் எதிர்ப்பாற்றலை அகிகரிக்கிறது. புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. வளர்சிதை மாற்ற நோய்க்குறியை தடுக்கின்றன. மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உடற்பயிற்சியில் இழக்கும் ஆற்றலை மீட்கிறது. தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவுகளை தெரிந்துகொள்ளுங்கள். ஒரு தக்காளியில் கலோரிகள் 22.5, கொழுப்பு 0.25 கிராம்கள், சோடியம் 6.25 மில்லி கிராம்கள், கார்போஹைட்ரேட்கள் 4.86 கிராம்கள், நார்ச்சத்துக்கள் 1.5 கிராம்கள், 0 சர்க்கரை, புரதச்சத்துக்கள் 1.1 கிராம் உள்ளது.


Leave a Comment