காலையில் ப்ரேக் ஃபாஸ்ட்டாக இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால், அது அசிடிட்யை கொண்டு வரும். அவை என்ன உணவுகள் என்று பாருங்கள். எனலே காலையில் நீங்கள் என்ன உணவு உண்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். இரவு முழுவதும் பட்டினி கிடக்கும் வயிற்றுக்கு காலை உணவும் மிகவும் முக்கியமான ஒன்றுதான். ஆனால், காலை உணவை நீங்கள் சத்துள்ளதாகவும், வயிற்றுக்கு இதமளிப்பதாகவும், எளிதில் செரிக்க கூடியதுமான உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். காலையில் முதல் உணவாக நீங்கள் எடுத்துக்கொள்ளும் சில உணவுகள் அசிடிட்யை ஏற்படுத்தக் கூடியவை. இதை குறிப்பாக நீங்கள் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அது உங்கள் வயிற்றுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அவை என்ன உணவுகள் என்று தெரிந்துகொண்டு, காலையில் முதல் உணவாக அவற்றைக் கட்டாயம் நிறுத்திவிடவேண்டும்.