ஆயுர்வேதத்தின் படி, மஞ்சளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. பொதுவாக மஞ்சள் ஆன்டிஆக்ஸிடன்ட், பாக்டீரியா எதிர்ப்பு, ஆன்டிபயாடிக், கிருமி நாசினிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. அவை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் பல நோய்களைத் தடுக்க உதவுகின்றன. சாதாரண சளி காய்ச்சல் என்றால் கூட மஞ்சள் பால் குடிப்பதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். அதே சமயம் பாலில் மஞ்சளை சேர்த்து குடிப்பது அனைவருக்கும் பலன் தராது. சிலர் மற்ற பிரச்சனைகளைக்கு ஆளாகின்றனர்.