செய்முறை
முதலில் முருங்கைக்கீரையை பூவோடு ஆய்ந்து வைத்து கொள்ளவும். மேலும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இஞ்சி மற்றும் பூண்டை இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு உள்ள எண்ணெய் ஊற்றி அதை சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன் அதில் சீரகத்தைப் போட்டு அதை வறுக்கவும். சீரகம் வறுபட்டதும் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.