நீங்கள் டீன் ஏஜ் குழந்தைகளின் பெற்றோர் என்றால், கடின காலங்களில் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். டீன் ஏஜ் பருவம் என்பது கத்தியில் நடந்திடும் பருவமாகும். இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு எதுவும் புரியாது. அவர்களுக்கு இந்த காலகட்டத்தில் உறுதுணையாக இருப்பது மிகவும் அவசியம். குறிப்பாக டீன் ஏஜில் அவர்கள் தவறுகிறார்கள் என்றால், அப்போதுதான் அவ்ர்களுக்கு உங்கள் துணை மிகவும் அவசியம். பொதுவாகவே சவாலான காலங்கள் கடினமானது. அதுவும் இந்த பருவத்தில் அவை கட்டாயம் தேவையானதுதான். அதுதான் குழந்தைகளுக்கு முதிர்ச்சியைத் தரும். வளரிளம் பருவத்தில் எண்ணற்ற உணர்வுகள் நம்மிடையே மேலோங்கும். சில உணர்வுகள் குறைவாக இருக்கும். அப்போது சிலருக்கு நடத்தையில் மாற்றம் ஏற்படும். தங்களின் அடையாளம் தேடும் வயதாகவும் இருக்கும். இந்த காலகட்டத்தில் பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் உள்ள நெருக்கம் குறையும். எனினும், பொறுமை, புரிதல் சரியான அணுகுமுறை என அனைத்துடனும், நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு நம்பிக்கையை வளர்த்தெடுக்கலாம். அவர்களுக்கு தேவையான ஆதரவையும் வழங்கலாம். இதனால் அவர்களின் எதிர்காலம் வளமாகும்.