முளைத்த வெந்தயம் சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. இந்த முளைத்த வெந்தயம் சமூக ஊடகங்களில் டிரெண்டிங் உணவுகளில் ஒன்றாகும். இப்போது முளைத்த வெந்தயமும் சாலட்களின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதத்தில், வெந்தயம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு மருந்து என்று கூறப்படுகிறது. வெந்தயத்தை தினமும் இரவில் ஊறவைத்து, காலையில் தண்ணீர் குடித்து வர சர்க்கரை நோய் கட்டுப்படும். சொல்லப்போனால் அந்த தண்ணீரை குடிப்பது மட்டுமின்றி, அந்த முளைத்த வெந்தய விதைகளை சாப்பிடுவதும் உடலில் பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.