18 ஆம் நாளின் முதல் ப்ரோமோ
இந்த நிலையில், தற்போது பிக்பாஸ் 18 ஆம் நாளின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த டாஸ்க்கில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்கில் சிறப்பாகவும் மோசமாகவும் விளையாடிய போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, இதில் சிறப்பாக விளையாடியவர்கள் ஒரு அணியும், மோசமாக விளையாடியவர்கள் ஒரு அணியும் விளையாடப் போகிறார்கள். இந்த இரண்டு அணியிலும் ஆண்கள், பெண்கள் கலந்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறப்பாக விளையாடியவர்கள் விருந்தினர்களாகவும், மோசமாக விளையாடியவர்கள் ஸ்டார் ஹோட்டல் ஊழியர்களாகவும் மாற இருப்பதால், அடுத்து வரும் இரண்டு நாட்கள் இந்த டாஸ்க்கில் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.