கமல் படங்களின் ஆஸ்தான நடிகர்
முதல் முறையாக கமல்ஹாசனின் அவ்வை சண்முகி படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருப்பார் வையாபுரி. அவரது நடிப்பு திறமை, உடல் வாகு, டயலாக் டெலிவரி போன்றவற்றால் வெகுவாக கவர்ந்த கமல் தனது படங்களில் வையாபுரிக்கு என்ற காமெடி அல்லது குணச்சத்திர கதாபாத்திரங்களை வைத்திருந்தார். அப்படி கமலுடன் இணைந்து காதலா காதலா, ஹேராம், பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் என தற்போது கமல் நடித்து வரும் தக்லைஃப் வரை அவரது ஆஸ்தான நடிகராக இருந்து வருகிறார். கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் சோலோ காமெடியனாக கலக்கியிருப்பார்.