மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலின் வீதிகளில் இந்த கிழங்கு பொட்டலம் கிடைக்கும். இதை செய்வதும் எளிது. இதை மந்தாரை இலையில் சுருட்டி வைக்க அதன் சுவை அசத்தலாக இருக்கும். இதை மந்தாரை இலையில் தான் சுற்றித்தருவார்கள். இதை அப்படியே பொட்டலாமாக வாங்கி சாப்பிடவேண்டும். இதை தயிர் சாதம், இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என அனைத்துடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இந்த கிழங்கு பொட்டலத்தை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். எளிமையான முறையில் சில நிமிடங்களில் செய்து விட முடியும். ஆனால் அதற்காக மந்தாரை இலைகளைத்தான் தேடிச்செல்லவேண்டும். உங்கள் பகுதியில் மந்தாலை இலைகள் எங்கு கிடைக்கும் என்று தேடி அதை பறித்து காயவைத்துக்கொள்ளுங்கள். மந்தாரை இலை கிடைக்காவர்கள், வாழையிலைலே கூட செய்துகொள்ளலாம்.