பிளாக் அண்ட் ஒயிட் சூட்டில் அவர் நடந்து வந்த சீன்கள் எல்லாம் தியேட்டர்களில் விசில் பறந்தன. அந்தத் திரைப்படம் மட்டுமல்லாமல், அந்தப்படத்தில் அவர் அணிந்திருந்த ஆடைகளும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டன. அந்த ஆடைகளை வடிவமைத்தவர் ஆடை வடிமைப்பாளர் அனுவர்தன். விஷ்ணு வர்தனின் மனைவியான இவர் அஜித்தின் ஆரம்பம், வீரம், விவேகம், வேதாளம் மட்டுமல்லாமல் தற்போது அவர் நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கும் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அண்மையில் குமுதம் சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டியில், பில்லா திரைப்படத்தில் அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசி இருக்கிறார்.