ஒரு நாள் கூட சுவாரசியம் குறையாமல் சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி, ஆரம்பத்தில் இருந்தே புதிய தொகுப்பாளர், புதிய விதிமுறைகள், புதிய வீடு என களைட்டிவருகிறது. மேலும் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசன் ஒவ்வொரு நாளும் ஒரு புது பிரச்சனைகளோடு நகர்ந்து வருகிறது. 15 ஆவது நாளான இன்று மூன்றாவது புரோமோ வெளியாகி உள்ளது. இதில் சௌந்தர்யா கதறி அழுதுள்ளார்.பெண்கள் அணியின் மற்ற நபர்களால் தான் டார்கெட் செய்யப்படுவதாகவும் முன்பு கூறியிருந்தார்.