அரிசி, சர்க்கரை சேர்த்து, எண்ணெயில் பொரித்து எடுக்கும் இனிப்பு சீனிப்பணியாரம். தீபாவளிக்கு சீனிப்பணியாரம் செட்டிநாடுகளில் செய்யப்படும் பொதுவான ஒரு இனிப்பு வகையாகும். இதை செய்வதற்கு நம் வீட்டில் உள்ள பொருட்களே போதும். மேலும் வழக்கமான தீபாவளி பலகாரங்களைவிட இது சூப்பர் சுவை நிறைந்ததாக இருக்கும். தீபாவளியை கொண்டாட்டங்களை மேலும் இனிப்பாக்க செட்டிநாடு பலங்காரங்களே உகந்தவை. இந்த ஆண்டு, கட்டாயம் இந்த சீனி பணியாரத்தை செய்து தீபாவளியை மேலும் இனிப்பாக்குங்கள்.