தெறிக்கவிடும் ஆக்ஷன் அவதாரம்
சுமார் 2.51 நிமிடங்கள் ஓடக்கூடிய சிட்டாடல்: ஹனி பன்னி ட்ரெயல்ர் முழுவதிலும் தெறிக்கவிடும் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார் சமந்தா. பாலிவுட் நடிகர் வருண் தவான் ஜோடியாக நடித்திருக்கும் சமந்தா, பெண் குழந்தைகளுக்கு தாயாகவும், சீக்ரெட் ஏஜெண்டாகவும் தோன்றுகிறார். ட்ரெயலரில் இடம்பிடித்திருக்கும் காட்சிகளில் பைக் ஸ்டண்ட், கார் சேஸ், கன் பைட் என வருண் தவானுடன் இணைந்தும், தனியாகவும் மிரட்டியுள்ளார் சமந்தா. இதன் மூலம் புதிய அவதாரம் ரசிகர்களுக்கு சமந்தாவின் விருந்து காத்திருக்கிறது என்றே கூறலாம். இந்த ட்ரெயலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.