நெல்லிக்காய் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. நெல்லிக்காயில் ஜூஸ் செய்தும், உலர வைத்தும், சமைத்தும் பயன்படுத்தலாம். குறிப்பாக உலர்ந்த நெல்லிக்காயில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் ஊட்டச்சத்து நிறைந்து உள்ளது. பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு உலர்ந்த நெல்லிக்காய் இயற்கை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. உலர் நெல்லியின் மருத்துவ குணங்கள், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாது உப்புகள் காரணமாகும். அது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.