அத விட சந்தோசமான விஷயம் என்ன இருக்கு.. குழந்தை மாதிரி.. ஐ போன புடுங்கிட்டு போயிடுச்சு அந்த பொண்ணு.. நெகிழும் ஜெயம் ரவி

Photo of author

By todaytamilnews


உங்களுடைய ஹீரோயின்ஸ் அசின், ஜெனிலியா, தமன்னா, அவங்க கூட எல்லாம் சேர்ந்து அந்த மாதிரி காம்போ மீண்டும் எப்ப வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்து கிட்டு இருக்காங்க என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயம் ரவி, ‘அப்படியா.. வந்தா நல்லா இருக்கும் கண்டிப்பா.. ஜெனிலியா கூட திருப்பி நடிப்பதை விட சந்தோஷமான விஷயம் என்ன இருக்கிறது. ஏன்னா நாங்க இன்னிக்கும் டச்ல இருக்கோம். அவங்களும் நானும் அப்படியே தான் இருக்கோம். சின்ன வயசுல எப்படி ரவுடித்தனம் பண்ணி சுத்திட்டு கலகலப்பாக இருந்தோமோ.. அந்த மாதிரி தான் இருக்கோம். ஸ்ரேயா எல்லாருமே இன்னும் டச் லதான் இருக்கோம். பேசிகிட்டும் இருக்கோம். அந்த பிரண்ட்ஷிப் எல்லாம் கிடைக்காது. அது அந்த காம்பினேஷன் எப்படி திருப்பி எடுத்துட்டு வர்றதுன்னு எனக்கு தெரியல. ஆனா அவங்க வில்லிங்கா இருந்தாங்கன்னா கண்டிப்பா எடுத்துட்டு வருவோம். அதுக்குன்னு ஒரு கதை அமையும். அதுக்குன்னு ஒரு ஸ்கிரீன் ப்ளே வந்துச்சுன்னா சூப்பரா இருக்கும். இந்த இன்டர்வியூ கேட்டு யாராவது அந்த மாதிரி கதை எழுதினால் கூட நல்லா தான் இருக்கும்.


Leave a Comment