இனிப்பும், புளிப்பும், நீர்ச்சத்தும் கொண்ட கிவி பழம். இது நம் உடல் நலத்துக்கு எவ்வளவு நல்லதோ அதே அளவு சுவையாகவும் இருக்கும். மிஸ்க்ஷேக், ஐஸ்கிரீம், கேக், பேஸ்ட்ரிகள் போன்ற பல வகையான உணவுகளின் சுவையை அதிகரிக்க கிவி பயன்படுகிறது. இது தவிர, கிவி சாலட் அல்லது சாறு வடிவத்திலும் உண்ணப்படுகிறது. கிவி எப்படி சாப்பிட்டாலும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் கிவியை தோலில்லாமல் சாப்பிடுவதா அல்லது தோலுடன் சாப்பிடுவதா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. கிவி பழத்தில் உள்ள அனைத்து சத்துக்களையும் பெற வேண்டுமானால், கிவி பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வதே சரியான வழி.