இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தயாளன் கதவை உடைத்து என்ன காரியம் செய்து விட்டாய்; எதற்காக இப்படி செய்கிறாய் என்று கேட்க, இன்னும் சிறிது நேரத்தில் எழிலை கயல் கல்யாணம் செய்து கொள்வாள். அவள் என்னை ஜெயித்து விடுவாள். என் உயிராகிய எழில் எனக்கு இல்லாமல் ஆகி விடுவான். அப்படி இருக்கும் பொழுது, எனக்கு எதற்கு இந்த வாழ்க்கை என்று நொந்து பேசினாள். இதையடுத்து தயாளன் இன்னொரு திட்டத்தை அவளிடம் சொல்ல, அவள் ஆசுவாசப்பட்டாள். இன்னொரு பக்கம் தேங்காயில் பாம் வைத்த ரவுடி தர்மலிங்கத்திற்கு போன் செய்து, மணமேடையில் இருக்கும் தட்டில் தேங்காய்களை நீங்கள் பார்த்தீர்களா என்று கேட்க, அவர் மணமேடையில் உள்ள தேங்காய்களை உற்று நோக்குகிறார், அத்தோடு எபிசோட் முடிவடைந்தது.