“பீம் பாய், பீம் பாய்” என மைக்கேல் மதன் காம ராஜாவில் வரும் வசனம் இன்று வரை ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது. மேலும் வசூல் ராஜா MBBS படத்தில் வரும் அனைத்து வசனங்கங்களும் பல 90 ஸ் கிட்ஸ்களுக்கு இன்று வரை நினைவில் இருக்கும். “கடவுள் இருக்குன்னு சொல்றான் பாரு அவன நம்பு, கடவுள் இல்லனு சொல்றான் பாரு அவன கூட நம்பு! ஆனா கடவுளே நான் தான் சொல்றான் பாரு அவன மட்டும் நம்பாத, பூட்ட கேஷ் ஆகிடுவா” என்ற வசனமே கிரேசி மோகனுக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. கமலுடன் இணைந்து அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜா, சதிலீலாவதி, அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா MBBS என பல படங்களில் பணியாற்றியுள்ளனர்.